உள்ளங்களை நெக்குருகச் செய்வதில் பக்திப் பாடல்களுக்கு இணை வேறு ஏதாவதுண்டா? - அடியேனால் முடிந்தவரை சில பக்திப்பாடல்களின் வரிகளைத் தட்டச்சு செய்கிறேன்..Change your Font Settings to UTF-8 to read the tamil letters here..[View->Encoding->UTF-8]

Thursday, April 19, 2007

Abhishegam - Manamea Manamea

தொகுப்பு: அபிஷேகம்
பாடல்    : Dr கிருதியா
இசை     :  அரவிந்த்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
 
பல்லவி
=======
ஆ: ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம் 
      ஓம்சக்தி ஓம் 
 
      மனமே மனமே மயங்காதிரு 
      கருமாரி தாய் மடிசேர்ந்திடு (மனமே) 
      நெற்றியிலே திருநீரு நெஞ்சத்திலே அவபேரு 
      ஆயிரம் கண்ணுடையவளே அடைக்கலம் எனப்பாடு 
      சுடுநீர் போல மனமே இளநீர் ஆகும் உடனே 
      சமயபுரத்தில் அபயம் இருக்கு ஏக்கம் கொள்ளாதே 
 
குழு: ஓம்சக்தி ஓம்சக்தி திருநாமமே 
       ஓயாமல் சொன்னாலே நலமாகுமே (ஓம்சக்தி)
 
சரணம்-1
=========
ஆ:  திருமேனியில் கருநாகமே புரண்டாடுதே 
      அது கரையேறப் பலகாலம் வழிதேடுதே (திருமேனியில்) 
      மனமே கண்மூடிப் புரண்டாய் தெருக்கோடி 
      அம்மா மகமாயி அவளது மடிதேடி 
      ஓடி ஒருவார்த்தை பேசாததேன் 
      காயும் பயிர்போல முகவாட்டமேன் 
      பொன்னி ஆறு அன்னை மனசு ஏக்கம் கொள்ளாதே 
 
குழு: ஓம்சக்தி ஓம்சக்தி திருநாமமே 
       ஓயாமல் சொன்னாலே நலமாகுமே (ஓம்சக்தி)

ஆ: மனமே மனமே மயங்காதிரு....

சரணம்-2
=========
ஆ: கருவேப்பிலை ஒருநாளில் சருகாகுமே 
      நம் கருமாரி வேப்பிலையோ மருந்தாகுமே (கருவேப்பிலை) 
      சருகாய் உலருவதும் மருந்தாய் வாழ்வதும் 
      மனமே உனதுவசம் உரைப்பது சமயபுரம் 
      ஆயி மகமாயி சரணாலயம் 
      தேடி வருவோர்க்கு நிழலேதரும் 
      உன் கவலையெடுத்துக் காலில்செலுத்து சாந்தம் உண்டாகும்
 
குழு: ஓம்சக்தி ஓம்சக்தி திருநாமமே 
       ஓயாமல் சொன்னாலே நலமாகுமே (ஓம்சக்தி)

ஆ: மனமே மனமே மயங்காதிரு....

Labels: , ,