உள்ளங்களை நெக்குருகச் செய்வதில் பக்திப் பாடல்களுக்கு இணை வேறு ஏதாவதுண்டா? - அடியேனால் முடிந்தவரை சில பக்திப்பாடல்களின் வரிகளைத் தட்டச்சு செய்கிறேன்..Change your Font Settings to UTF-8 to read the tamil letters here..[View->Encoding->UTF-8]

Friday, May 11, 2007

Abhishegam - Aaraadhu Aaraadhu

தொகுப்பு : அபிஷேகம்
இசை : அர்விந்த்
பாடல் : Dr கிருதியா
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்


பல்லவி
======
ஆறாது ஆறாது ஆறாது
ஆறு முகமின்றி என்நெஞ்சு ஆறாது (ஆறாது ஆறாது)
சரவணக் குளக்கரை நறுமணத் திருக்கரை
பாடாமல் மனம் ஆறுமோ
உன்னைப் பாடாதது தமிழாகுமோ (சரவணக்)
முருகா முருகா அருள்வாய் குமரா
முருகா முருகா அருள்வாய் குமரா (ஆறாது ஆறாது)


சரணம்-1
=======
பழமுதிர் சோலையில் அழகிய மாமயில்
பழகிய நடையதைப் பாடிடவா
திருமுருகாவென உருகிடும் சேவலின்
சேதியை செவியெங்கும் சேர்த்திடவா
அலையாடும் செந்தூர் அதிலாடும் ஒருதேர் (அலையாடும்)
விளையாடும் கோலம் வரைந்திடவா
வெல் என்று சொல்லி வேல் ஒன்று செல்லும் (வெல் என்று)
சம்ஹார பாவம் பாடிடவா
பாடாமல் என் ஆசை ஆறிடுமா
முருகா முருகா அருள்வாய் குமரா (முருகா முருகா)

(ஆறாது ஆறாது)


சரணம்-2
=======
அண்ணாந்து திருநீறு அணிகின்ற அடியார்கள்
எண்ணத்தில் உன்பேரை எழுதிவைப்பேன்
தென்னாடு சிவனாரும் தொழுகின்ற வடிவேலை
தேடாது போவோரைத் தெளிய வைப்பேன்
குறமாது வள்ளி குறியொன்று சொல்லி (குறமாது வள்ளி)
வாராத நாளில் தூது செல்வேன்
அழியாத புகழை அருணகிரித் தமிழை (அழியாத)
அடிவாசல் தோறும் எழுதிவைப்பேன்
எழுதாத நாளைப் பழுது என்பேன்
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா அருள்வாய் குமரா


ஆறாது ஆறாது ஆறுமுகமின்றி என்நெஞ்சு ஆறாது
ஆறாது ஆறாது ஆறுமுகமின்றி என்நெஞ்சு ஆறாது
சரவணக் குளக்கரை நறுமணத் திருக்கரை
பாடாமல் மனம் ஆறுமோ
உன்னைப் பாடாதது தமிழாகுமோ (சரவணக் குளக்கரை)
முருகா முருகா அருள்வாய் முருகா
முருகா முருகா முருகா குமரா

Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home